நாடளாவிய ரீதியில் உள்ள ஆறு தபால் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் வாழைச்சேனை தபால் நிலையம் மற்றும் ஓட்டமாவடி தபால் நிலையம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களும் மூடிக் காணப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் சுகயீன விடுமுறையை முன்னெடுத்துள்ளமையால் தபால் அலுவலக சேவைகள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக பொது மக்கள் தபால் சேவையை பெற்றுக் கொள்ளும் வகையில் வருகை தந்து ஏமாற்றங்களுடன் திரும்பி செல்லும் நிலைமை காணப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1