வவுனியா எம்.பிக்கு இரவில் வந்த தொலைபேசி அழைப்பு!

Date:

வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தள விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இதில் நீங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிரச்சனைதானே என தெரிவித்தனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் 5000 குளங்களை புணரமைக்கும் ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் ஒரு கட்டமாக இன்றையதினம் வவுனியா பொன்னாவரசங்குளம், ஈச்சங்குளத்தில் 7.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின்னர் குளங்களினை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற நிலையில் வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுற்றுலா மையம் தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா குளத்தினுய் கூடாரம் அமைத்தல் போன்ற செயற்பாட்டினை கண்டிக்கிறேன். குறிப்பாக குளங்களினை அபிவிருத்தி செய்து கொண்டு வரும் செயற்பாட்டினை எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குளங்களினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க முடியாது. ஏற்கனவே சுற்றுலாத்தளமானது அங்கு அமைப்பதற்கு நகரசபையே காரணமாகும்.

மேலும் இச்சுற்றுலாத்தளத்திற்கு முறைப்படி ஆவனங்கள் பெற்ற பிறகே இவ்வேலை திட்டங்கள் ஆரம்பமாகின. இதனை எங்களால் தடுக்க முடியாது என்றாலும் கூட தற்போது மண் அடித்து கட்டப்பட்ட கூடாரமானது உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறான நிலைமைக்கு நகரசபையின் அசமந்த போக்குதான் காரணமாகும்.

இதேவேளை நேற்றையதினம் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்திருந்தது. அவ்வழைப்பில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இதில் நீங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிரச்சனைதானே என்று ஒரு சூட்சுமமான கருத்து வந்திருந்தது. உடனே இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரிவித்து இதற்கு அனுமதி வழங்கியுள்ளீர்களா என கேட்ட போது அவர்களினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அப்பொய்யினை உரைத்தவரையும் பிரதமர் செயலகத்தினால் வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.
வருகின்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்விடயத்தை முன்னெடுத்து இதனை அகற்றுவதற்குரிய தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்.

மேலும் இதற்கு ஆளுனரும் கட்டாயம் ஆதரவு தருவார். கட்டிடத்தை அகற்றக்கூடாது என்று நீதிமன்ற கட்டளை பெறப்பட்டுள்ளது. இருந்த போதும் எங்களால் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மாணத்தை எடுப்பதோடு அதிலே சில பிரச்சனைகளை வெளியே கொண்டு வருவதற்கும் இருக்கின்றோம். இதற்கு பின்னணியில் ஆதரவாக நாங்கள் இருப்பதாக மக்கள் பிழையாக எண்ணுகின்றனர். ஆனால் இதற்கு உண்மையில் ஆதரவாக இருப்பது சில திணைக்கள உத்தியோகத்தர்களும், நகரசபையும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்