உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாவது நாளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், இப்பொழுதும் தனது நிலைப்பாடு அது என்று கூறினார்.
எந்தவொரு நிறுவனத்தின் விசாரணைக்கும் தனது ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தாக்குதல்கள் நடக்கவிருப்பதை அவர் அறிந்திருந்ததாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி, தனது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சமூகத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சஹ்ரான் ஹாஷிமை கைது செய்யும் பிடியாணை 2017 இல் வழங்கப்பட்டது, படியாணை பட்டியல்களை பாதுகாப்பு கவுன்சில் பெறவில்லை. தனிநபர்களைக் கைது செய்வது நாட்டின் ஜனாதிபதியின் கடமை அல்ல என்று கூறி கூறினார்.
தன்னால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, ஏன் சஹ்ரான் ஹாஷிம் கைது செய்யப்படவில்லை என்பதை ஆராய வேண்டும் என்றார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கியிருந்தனர், அந்த நேரத்தில் அரச புலனாய்வு சேவை இயக்குனர் தனது கடமையை நிறைவேற்றியதாகவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் அளித்து கடிதங்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறினார்.
தாக்குதல்களுக்குப் பிறகுதான் அத்தகைய தகவல்களை தான் அறிந்ததாகவும், தாக்குதலின் பின்னர் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே தனக்கு அவை தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.
தனக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற அறிக்கைகளை அவர் புறக்கணித்திருக்க மாட்டார் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தகவல்களை முன்னரே அவர் அறிந்திருந்தால் கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தி, ஞாயிறு ஆராதனைகளை நிறுத்தும்படி கர்தினாலுக்கு தெரிவித்திருப்பேன் என்றார்.