26.2 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

ஓடிப்போவோமா?: பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதிய 78 வயது தாத்தா; மனைவிக்கு தெரிந்ததால் புகையிரதத்தின் முன் பாய்ந்தார்!

16 வருடங்களின் முன்னர் அயல்வீட்டு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதம் மனைவியின் பார்வைக்கு கிடைத்ததால், வீட்டைவிட்டு வெளியேறிய 78 வயது முதியவர், புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

கேகாலை பொது மருத்துவமனைவியில் அவரது மரண விசாரணை நடந்தபோது, இந்த தகவல் வெளியானது.

கேகாலை பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதினி களுஆராச்சி நிசங்க முன்னிலையில் மரணவிசாரணை இடம்பெற்றது. உயிரிழந்தவர் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர். இறந்தபோது அவருக்கு வயது 78. மூன்று பிள்ளைகளின் தந்தை.

ரம்புக்கணை புகையிரத நிலையத்திற்கு அருகில் முதியவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்திருந்தார். அவரது சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. ஆனால் அடையாளம் காண முடியவில்லை.

5 நாட்களின் பின்னர் மனைவி, பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 22ஆம் திகதி மரண விசாரணை இடம்பெற்றது.

உயிரிழந்த முதியவரின் மனைவி சாட்சியமளித்தார்.

“சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் அயல்வீட்டு பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனது கணவர் எழுதிய கடிதம் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. இருவரும் ‘ஓடிப்போய் நன்றாக வாழ்வோம்’ என்று என் கணவர் அவளுக்கு எழுதியிருந்தார். இந்த கடிதத்தைப் பற்றி நான் என் கணவரிடம் கேட்டபோது, ​​அவர் என்னுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அவரது கணவருக்கு 62 வயது. 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் திரும்பி வரவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இன்று அவரது உடலைப் பார்த்தோம்“ என்றார்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் அடுத்த வீட்டு பெண்ணுக்கு  எழுதிய காதல் கடிதத்தையும் மரண விசாரணை அதிகாரிக்கு வழங்கினார்.

அது தற்கொலையென முடிவான பின்னர், மனைவி சடலத்தை பொறுப்பேற்று இறுதிச்சடங்கை செய்தார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலக தலைவர்கள் கடல் வழியாக தப்பிச் சென்றனரா?

Pagetamil

புகையிரதத்தை பற்றி எதுவுமே தெரியாது… தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்த போது தாயும் மகளும் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Pagetamil

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

Leave a Comment