வனிதாவின் அடுத்த கணவர் இவர்தான் என பிரபல சீரியல் நடிகர் போட்டோவுடன் ஒரு மீம் உலா வருகிறது.
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார் வனிதா. அவர் பிக் பாஸ் வீட்டில் ஏற்படுத்திய பிரச்சனைகள் தொடங்கி, வெளியில் வந்த பின் தொடங்கிய யூடியூப் சனல், காதல் திருமணம், அதனால் வெடித்த சர்ச்சை, விவாகரத்து மற்றும் தற்போது அதிக அளவு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருப்பது வரை வனிதா கடந்த இரண்டு வருடமாக அதிகம் பேசப்பட்ட ஒருவராக இருந்து வருகிறார்.
தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வரும் வனிதா அடுத்து விரைவில் காதல் திருமணம் செய்யப்போகிறார் என செய்திகள் உலா வர தொடங்கி இருக்கின்றன.
வனிதாவின் முந்தைய திருமணங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விவகாரத்தில் முடிந்துவிட்ட நிலையில் அவர் எப்போது அடுத்த திருமணத்தை அறிவிப்பார் என்று, அவரது தீவிர வெறித்தனமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வனிதா பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் உடன் இருக்கும் போட்டோவை போட்டு அவர் தான் வனிதாவின் ஐந்தாவது கணவர் என நெட்டிசன்கள் மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அரவிந்த் சூப்பர் ஹிட் ஆன தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தது. வனிதா உடன் இணைத்து பரவி வரும் மீமை இன்ஸ்டாவில் போட்டு கோபத்துடன் பேசி இருக்கிறார் அரவிந்த், “என்ன வெச்சி மீம்ஸ். ஐயோ,.. கடவுளே, ஒரு போட்டோ எடுத்துக்கு இப்படியா. நல்லா இருங்க பா” என அவர் கூறி உள்ளார்.