இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்படாத 8, 300 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் புத்திக்க டி சில்வா, மற்றும் துஷார விஜேசிங்க ஆகியோர் நேற்று (23) தம்புள்ளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டனர்.
மனிதப்பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ள இந்த தேங்காய் எண்ணெய்களை பரிசோதித்து, அவை மனிதப் பாவனைக்கு உகந்தவையா என்பதை புத்தாண்டின் முன்னர் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவற்றில் 13 கொள்கலன் தேங்காய் எண்ணெய் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.