26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

சிட்னியில் 60 ஆண்டுகளின் பின் பெருவெள்ளம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 18000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961ஆம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல இப்போதும் மோசமான அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் ஓடும் ஆறுகளான ஹாக்ஸ்பரி, நிபீன், பாரமட்டா ஆகியவற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது.

சிட்னியில் உள்ள விமான ஓடுதளத்தில் வெள்ளம் புகுந்ததால், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல சவுத் ஈஸ்ட் குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் வெள்ள நிலைமை மோசமாக இருக் கிறது. பிரிஸ்பேன் நகரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக 18 ஆயிரம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment