25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்பத்திற்கு மற்றொரு இடி: குடியிருந்த காணிக்குள் நுழைகிறார் யாழ்ப்பாண ஹொட்டல் முதலாளி!

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மற்றொரு பேரிடியாக அவர்களது காணி பறிபோயுள்ளது.

பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு பகுதியில் உள்ள காணி, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு ஆனந்த சுதாகரின் குடும்பத்திற்கும் தெரியாது கைமாறியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அந்த உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், போலி ஆவணங்களை வைத்தும் போலி கையெழுத்துக்களையும் வைத்தே காணி உரிமத்தை தங்களிடம் இருந்து காணியை சுவீகரிப்பதாக ஆனந்த சுதாகரின் சகோதரி தெரிவித்தார்.

முதலாளி வெளிநாட்டில் இருப்பதால், அவரது பணியாளர்கள் என குறிப்பிட்ட சிலரே காணிக்குள் வந்து வேலியடைக்க முயன்றனர். காணி உரித்து தொடர்பில் இதுவரை சுயாதீனமாக அறிந்து கொள்ள முடியவில்லை.

அந்த காணிக்குள் வைத்து தன்னை தாக்க முயற்சித்துள்ளதாகவும் ஆனந்தசுதாகரனின் சகோதரி தெரிவித்தார்.

ஆனந்த சுதாகரின் விடுதலைக்காகத்தான் உதவி செய்ய முடியாது போகிறது என்றால் குறைந்த பட்சம் அவரது காணியையாவது மீட்டு அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக சகோதரியும் தாயாரும் வேண்டி நிற்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

‘அர்ச்சுனாவை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்… அவருக்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்’: சைவ குருமார் கொந்தளிப்பு!

Pagetamil

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

Leave a Comment