நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஒரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டதாக செய்த முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன் ஆஜராக இருவரும் அழைக்கப்பட்டனர்.
வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய ராஜித, அரசியலில் நுழையும் போது, பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ளவும் தயாராக வந்ததாக தெரிவித்தார்.
கடத்தல் சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
அந்த நேரத்தில் தலைவலி மற்றும் குமட்டலால் அவதிப்படுவதாகக் கூறி பத்திரிகையாளர் தனது அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும், சிகிச்சை பெறும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1