29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

158 பேருக்கு தொற்று!

நாட்டில் இன்று மேலும் 158 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை  89,655 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,099 ஆக அதிகரித்துள்ளது.

2,645 பேர் தற்போது நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வைரஸிலிருந்து குணமடைந்த 239 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,466 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்று சந்தேகத்தில் 338 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!