திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார.
சேருநுவர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1