தலைப்பை பார்த்து விட்டு ஏதோ பலான விவகாரமென மிரண்டு விடாதீர்கள். இது கொஞ்சம் பலமான விவகாரம்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முக்கியமான தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் தசைப்பிடிப்பிற்கு (மசாஜ்) செல்ல, பெண் அரச அதிகாரியொருவர் அதற்கு மறுப்பு தெரிவிதது, அவரை திருப்பி அனுப்பியுள்ளார். இதுதான் நடந்த சம்பவம்.
இந்த சம்பவம் கொழும்பிலல்ல, யாழ்ப்பாணத்திலேயே நடந்தது.
வடக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்தியசாலைகளில் தசைப்பிடிப்பு வசதியுள்ளது. நோயாளிகளிற்கானசிகிச்சை முறைகளில் ஒன்று.
முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவர், சில காலமாக அங்கு முழு உடல் தசைப்பிடிப்பை மேற்கொண்டு வந்து்ள்ளார்
அவருக்கு அப்படியெந்த நோயுமில்லை. எனினும், அந்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி அந்த அசியல்வாதிக்கு மரியாதை நிமித்தமாக அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தார். எப்பொழுதாவது இடையிடையிடையே சென்று, அந்த அரசியல் பிரமுகர் தசைப்பிடிப்பை மேற்கொள்வார்.
எனினும், அந்த பொறுப்பதிகாரி அண்மையில் இடமாற்றம் பெற்று சென்று விட்டார். தற்போது பெண்ணெருவரே பதவியில் இருப்பிறார்.
குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, மசாஜ் செய்ய வரவா என கேட்டுள்ளார். பெண் அதிகாரியும் சம்மதிக்க, அங்கு சென்றுள்ளார்.
அரசியல் பிரமுகர் அங்கு சென்று, மசாஜிற்கு தயாரான போது, இநத அதிகாரி, எதற்காக மசாஜ் செய்கிறீர்கள்? என்ன வருத்தம் என கேட்டுள்ளார்.
வருத்தம் ஒன்றுமில்லை, முழு உடல் மசாஜ் செய்யப் போவதாக அரசியல் பிரமுகர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதை நிராகரிதத பெண் அதிகாரி, நோயாளிகளிற்கு மட்டுமே மசாஜ் வசதி வழங்கலாம், நோயாளி அல்லாதவர்கள் கிளப்புகளில்தான் மசாஜ் செய்வார்கள். நீங்கள் வெளியில் சென்று மசாஜ் செய்யுங்கள் என கண்டிப்பாக கூறிவிட்டார்.
இதையடுத்து மசாஜ் செய்ய பதிவு செய்த சிட்டையையும் அங்குகேயே வீசியெறிந்து விட்டு திரும்பி வந்து விட்டார்.
யார் அந்த அரசியல் பிரமுகர் என்பதை ஊகித்து அறியுங்கள்.