26.5 C
Jaffna
December 30, 2024
Pagetamil
விளையாட்டு

அதிக ரி20 வெற்றி: டோனியை சமன் செய்தார் ஆப்கான் கப்டன்!

சிம்பாவேயுடனான 2வது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிக ரி20 வெற்றிகளை பெற்ற கப்டன் என்ற இந்திய அணியின் முன்னாள் கப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் கப்டன் அஸ்கர் ஆப்கன்.

வெற்றி சதவிகிதத்தில் இந்திய அணியை விட, ஆப்கான் அசுர வேகம் காட்டியுள்ளது.

அபுதாபியில் நடந்த சிம்பாப்பே அணிக்கு எதிரான 2வது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 17.1 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த வெற்றி என்பது அந்த அணியின் கப்டன் அஸ்கர் ஆப்கன் தலைமைக்குக் கிடைத்த 41வது ரி20 வெற்றியாகும்.

இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ்.தோனி, 72 ரி20 போட்டிகளுக்கு கப்டனாக பொறுப்பேற்று 41 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். அந்தச் சாதனையை அஸ்கர் ஆப்கன் சமன் செய்துவிட்டார்.

தோனி 72 போட்டிகளுக்கு கப்டனாகப் பொறுப்பேற்று 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் கப்டன் அஸ்கர் 51 போட்டிகளில் 41 வெற்றிகளைப் பெற்று 81.37 சதவீதம் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

தோனியின் தலைமையில் இந்திய அணி ரி20 போட்டியில் 59.23 சதவீத வெற்றிகளைத்தான் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் கப்டன் மோர்கன் 33 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தானின் சர்பிராஸ் அகமது கப்டன்ஷிப்பில் 29 வெற்றிகளுடன் 4வதுஇடத்திலும் உள்ளார்.

மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கப்டன் டரன் சாமி தலைமையில் அந்த அணி 27 வெற்றிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 3வது இடத்தை ரஷித்கான் பெற்றார்.

தற்போது ரஷித் கான் 95 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கப்டன் ஷாகித் அப்ரிடி 2வது இடத்திலும், இலங்கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க முதலிடத்திலும் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment