போதைப்பொருளுடன் பயணித்த 3 இலங்கை மீன்பிடி கலங்களை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது. இலட்சத்தீவு தீவுகளுக்கு அருகே நேற்று காலை இந்த சம்பவம் நடந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, ஹெரோயின், ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்திய கடற்படையின் ஒரு டோர்னியர் விமானம் கடந்த எட்டு நாட்களாக அரேபியா கடலில் நகர்ந்து கொண்டிருந்த ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது.
விமானம் தெற்கு கடற்படை கட்டளை மையம் மற்றும் இந்திய கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.
மினிகோய் தீவுகளுக்கு தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை பிற்பகல் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
லட்சத்தீவு நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் 7ஆம் திகதியும் 3 இலங்கை படகுகளை போதைப்பொருளுடன் இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.