சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், சயீஷாவும் நடித்த டெடி படம் கடந்த 12ம் திகதி ஓடிடி தளத்தில் வெளியானது. படம் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
டெடி படத்தை பார்த்துவிட்டு பல குட்டீஸ்கள் தங்களின் டெடி பொம்மையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை பெற்றோர் ட்விட்டரில்- ஆர்யாவை டேக் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
படத்தின் கதைப்படி சயீஷாவின் ஆத்மா டெடி பொம்மைக்குள் சென்றுவிடும். அதனால் அந்த டெடி பொம்மை பேசுவது, நடப்பது என்று மனிதர்கள் போன்று இருந்தது. டெடி படத்தை பார்த்த பலரும் அந்த பொம்மைக்குள் யாரோ இருக்கிறார்கள். ஆனால் அது ஆணா, பெண்ணா என்று தான் தெரியவில்லை என மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தனர்.
சிலரோ, டெடிக்குள் யார் தான் இருந்தாங்க என்று நீங்களே சொல்லிடுங்க என ஆர்யாவிடமே கேட்டனர். டெடி ரகசியம் தெரியாமல் பலரும் குழம்புவதை பார்த்த ஆர்யா அவர்களின் அவஸ்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
டெடி பொம்மையாக நடித்த நபரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஆர்யா கூறியிருப்பதாவது,
https://twitter.com/arya_offl/status/1372428431498084352/photo/1
இவர் தான் அந்த நபர். பாடி சூட் அணிந்து டெடியாக நடித்தவர் நாடக கலைஞர் மிஸ்டர் கோகுல். டெடியின் தலை @NxgenMedia நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றார்.