நேற்று 338 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 88,862 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கண்டறியப்பட்டவர்களில் 309 பேர், மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தும் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணி 84,342 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 16 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
2,600 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 354 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 85,725 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்று சந்தேகத்தில் 441 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.