யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக் கழகப் பணியாளர்கள் மற்றும் கடந்த 8 ஆம் திகதி குறித்த மாணவர் ஒழுக்காற்று அதிகாரி பங்கு பற்றிய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், எழுமாற்றுப் பரிசோதனைக்கு உடன்பட்டவர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த சுமார் 55 பேர், மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவியின் வகுப்பு மாணவிகள் சிலர் உட்பட 75 பேருக்கு இன்று யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்குரிய மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.