நாட்டிவ் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று (17) அறிவிக்கப்பட்ட மரணங்களுடன், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை, இருதய நோய் நிலை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், ஈரல் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், ஈரல் செயலிழப்பு, சிறுநீர நோய் நிலை மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.