இலங்கை சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில், நாட்டின் உள்ளக அரசியல் விவகாரம் தொடர்பில் அதிகளவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்களிப்பில் இலங்கை தோல்வியடைந்த போதிலும் எதுவும் இடம்பெறாது. சர்வதேச நீதி மன்றம் 2019 ஆண்டில் பெரிய பிரித்தனிவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது டியோ காசி தீவுகளை பிரிட்டன் நிருவகிப்பபது முழுமையாக தவறானது. இதனால் மொரிஷஸ் நாட்டின் நிருவாகத்திடம் அதனை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியே சர்வதேச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை பெரிய பிரிட்டன் ஏற்றுக்கொண்டதா. இல்லை. இது வெறுமனே ஓர் ஆலோசனை என்றே என பிரிட்டன் தெரிவித்துள்ளது என்றார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே என்றும், இலங்கை தொடர்பான விஷயங்களில் சட்டப்பூர்வமாக தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் தகவல்களை திரட்டுவதற்காக தனியான குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில், இராணுவ குற்றச்செயல்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கை நிர்வாகத்தினரை அல்லது, இராணுவ பிரதானியை மின்சார நாற்காலி தண்டணைக்கு உட்படுத்தப்படும் என்ற சமூக கருத்த வேறுனே ஒரு மாயை என்றார்.
சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற போதிலும் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை மேற்கொள்ள முடியாது. இதில் குற்றவாலியாக காணப்படும்பட்சத்தில் சிறைத்தண்டணை மாத்திரமே விதிக்கப்படும் மரண தண்டணை என்பது வெறுமனே சோடிக்கப்படும் கட்டுக்கதையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘தெற்கின் முக்கிய அரசியல் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறிவிட்டன. நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே, பல இடதுசாரிக் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற இடங்களைப் பெற்றன. இருப்பினும் அவர்களின் ஆசன எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டன, இது ஒரு தனி நாட்டை ஸ்தாபிக்கக் கோரும் பிரிவுகளுக்கு வசதியானது. இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் 30 ஆண்டுகால மோதலுக்கு வழிவகுத்தன. எனவே நாட்டின் அரசியல் நிலப்பரப்பைக் கவனிக்க வேண்டும்“ என்று அவர் கூறினார்
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவிக்கையில்,
்கைஇம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான சில நாடுகள் இணை அனுசரணையுடன் சமர்ப்பித்துள்ள பிரேரணை கடுமையானதாக சோடித்துக் காட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/01 இணக்கப்பாட்டுக்கு இணை அனுசரணை தெரிவிப்பதற்கு உடன்பட்டதை தொடர்ந்து நாட்டிற்கு எதிரான இணக்கப்பாட்டு விடயத்திற்கு உடன்படுவதற்கு உடன்பாடு ஏற்பட்ட போதிலும் அதில் சில விடயங்கள் எமது நாட்டின் சட்டதிற்கு அமைய மேற்கொள்ள முடியாது.
இதேபோன்று அதில் உடன்பட்டவை பல இருந்ததாகவும், கூறப்பட்ட போதிலும் அதன் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 30ஃ01 க்காக பொதுமக்களின் வெறுப்பின் அளவு எப்படி இருந்தது என்பது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜயாதிபதி தேர்தல் மூலம் வெளிப்பட்டது. நாட்டில் முதல் முறையாக சிறுபான்மையின் வாக்குள் இன்றி இத்தேர்தலில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொது தேர்தலில் 3ஃ2 பெருபான்மையுடன் பாராளுமன்றத்திற்கு அரச நிருவாகம் தெரிவானமை முக்கியமானதாகும். 30/01 இணக்கப்பாட்டிற்கு கைச்சாத்திட்டவர்கள் அதாவது 2015 ஆம் ஆண்டில் அப்பொழுது இருந்தவர்கள் இன்று எமது பாராளுமன்றத்தில் இல்லை.
நாட்டில் உள்ள தேர்தல் முறைக்கு அமைவாக பிரதான கட்சிக்கு ஒரு தேர்தல் தொகுதியிலும் வெற்றிப்பெற முடியாத நிலை இருந்த போதிலும் 30/01 இணக்கப்பாட்டிற்கு இணை அனுசரணை தெரிவித்தமையினால் கடந்த தேர்தலில் பொதுமக்கள் வெறுப்பை வெளிப்படுத்தி பொதுமக்கள் தமது ஜனநாயக அதிகாரத்தை பயன்படுத்தி இவர்கள் அனைவரையும் ஓரங்கட்டியுள்ளனர்.