காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வரும் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
“இன்று காலை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்
அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளேன்“ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1