மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று (16) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு, பாதையை விட்டு குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இவ்விபத்தால் காரின் முன் பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1