இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படங்கள் சிலவற்றை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 28 வயதான சஞ்சனா கணேசனின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், தற்போது மகாராஷ்டிராவின் புனேவில்தான் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்திய வீரர் பும்ராவிற்கு, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1