26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

வங்கிக்கடனை அடைக்க முடியாதவர்களிற்கு சலுகை வழங்க யோசனை!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.

வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இதுபோன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில்  அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

குறித்த கலந்துரையாடலில் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் டி.எம்.ஜே.வி.பி. பெர்னாண்டோ, மக்கள் வங்கித் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கேசிலா ஜயவர்தன, பிராந்திய அபிவிருத்தி வங்கித் தலைவர் மஹிந்த சாலிய,  தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அனுஷ்கா குணசிங்க மற்றும் மேம்பாட்டு நிதித் துறை பணிப்பாளர் கீதா விமலவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பிரதமர் ஊடக பிரிவு

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment