முன்னாள் மேற்கு மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சமீபத்திய அறிக்கை மத தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கொந்தளித்துள்ளார்.
அண்மையில், அசாத் சாலி தெரிவிக்கையில், நாட்டின் சட்டம் எதுவாக இருந்தாலும், முஸ்லிம் சட்டத்தை மட்டுமே மதிப்பதாக கூறியிருந்தார். எனினும், பின்னர் அவர் தனது கருத்திற்காக மன்னிப்பு கோரியிருந்தார்
அசாத் சாலியின் கருத்து மத தீவிரவாதம் நிறைந்ததாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
“அவர் ஷரியா சட்டத்தின்படி செயல்பட விரும்பினால், அவர் சவுதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டும். அவர் இலங்கையில் வாழ முடியாது. அவர் இலங்கையில் வாழும் வரை, அவர் இலங்கையில் நிலவும் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நாங்கள். அவரைக் கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தை ஆராயுமாறு நான் தனிப்பட்ட முறையில் சிஐடியிடம் கூறியுள்ளேன், ”என்று அமைச்சர் கூறினார்.