பருத்தித்துறையில் துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் நடமாடிய போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய போதே துவிச்சக்கர வண்டிகளைத் திருடியமை தெரியவந்தது என்று பொலிஸார் கூறினர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபரால் திருடப்பட்ட 21 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்படவுள்ளன.
திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை சந்தேக நபர் விற்பனை செய்து பணத்தை எடுத்துள்ளார்.
மீட்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
துவிச்சக்கர வண்டி திருடப்பட்டிருந்தால் உரியவர்கள் அதனை அடையாளம் காட்ட முடியும் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.