வடமாகாணத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று வட மாகாணத்தில் 422 பேரின் பிசிஆர்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.
யாழ் மாவட்டத்தில், சிறைச்சாலையில் இருந்து 7 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1