விடுதலைப் புலிகளை மீளுருவாக்க யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிப்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி ஆராயவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளாராம் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போரின் போது தப்பித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இப்பொழுது வடக்கு மக்களுடன் தொடர்பு கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. போராட்டங்கள் என்ற போர்வையில் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து தகவல் கிடைத்துள்ளதால், பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல்வாதிகளின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என அமைச்சர் வீரசேகர தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை ஆராயவும், பாதுகாப்பு தரப்பினருக்கு வேண்டிய ஆலோசனையை வழங்க, அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கே நேரில் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.