வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில் குருமன்காடு பகுதியில் இருந்து நகரம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த குடும்பஸ்தர், பண்டாரிக்குளம் வீதியால் திரும்ப முற்ப்பட்டபோது அதே திசையில் பின்னால் சென்றுகொண்டிருந்த கப் வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1