யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதையடுத்து, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆலயங்களில் 50 பேர் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. மரண நிகழ்களில் 25 பேரும், திருமண நிகழ்வுகளில் 250 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.
மக்கள் தேவையற்ற களியாட்டங்களை தவிர்த்து, தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து, இயன்றவரை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தின் முதல் 12 நாட்களில் 108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1