Pagetamil
இலங்கை

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) அறிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் இதுவரை 525 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட மணங்களின் விபரம்,

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, சுவாசத் தொகுதி தொற்று, கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 தொற்று மற்றும் உக்கிர சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, அவையவங்கள் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகமை, வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 10ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதன நோய் நிலை, உக்கிர சிறுநீரக நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா மற்றும் நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

east tamil

Leave a Comment