கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சீனி மற்றும் இனிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகை 187 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி மற்றும் இனிப்பு பொருபொருட்கள் இந்த ஆண்டு ஜனவரியில் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பான இறக்குமதிக்கான செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உணவு மற்றும் பானங்கள் இறக்குமதி கடந்த ஆண்டு ஜனவரியில் 147.5 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து இந்த ஆண்டு ஜனவரியில் 184 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
காய்கறிகள், மசாலா பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் எரிபொருள் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கான செலவுகளும் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் அதிகரித்துள்ளன.
இருப்பினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.
வாகனங்களின் இறக்குமதி 2019 ஆம் ஆண்டில் 816 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, 2020 ஆம் ஆண்டில் 283 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தது,
கடல் உணவு, பால் பொருட்கள், மர தளபாடங்கள், ஆடை மற்றும் பிற பொருட்களுக்கான இறக்குமதி செலவுகள் கடந்த 24 மாதங்களில் படிப்படியாக குறைந்து வருவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.