பலாங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த 21 வயது இளைஞர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய மொழி பரீட்சையில் தோற்றியபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
முல்லைத்தீவு, வலஸ்முல்ல மற்றும் ஹிடோகம ஆகிய பகுதிகளில் ஏனைய மூன்று சந்தேக நபர்கள் பரீட்சையின் போது கைது செய்யப்பட்டனர்.
பரீட்சையில் ஆள்மாற்றாட்டத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1