25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
ஆன்மிகம்

வீட்டிலேயே மகா சிவராத்திரி பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யலாமா?: எப்படி செய்வது?

மகா சிவராத்திரி தினத்தில் சிவாலயத்திற்கு ஒரு வில்வ இலையாவது எடுத்துச் சென்று இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வர வேண்டும் என முன்னோர்கள் சொல்லியுள்ளனர். எனினும், ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலும் சிவனிற்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபடலாமென்கிறார்கள் சிவாச்சாரியார்கள்.

சிவ ராத்திரி தினத்தன்று வீட்டில் சிவ பெருமானுக்கு அபிஷேக, அலங்காரம் செய்து வழிபட்டாலும் சரி, கோயிலுக்கு சென்று அபிஷேக அலங்காரங்களைத் தரிசித்து வழிபட்டாலும் சரி, அன்றைய தினம் முழுவதும் உணவு, உறக்கத்தை நீக்கி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

நோயாளிகள் உணவை எடுத்துக் கொண்டு இறைவழிபாடு செய்வது தவறில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திரயோதசி திதி அன்று கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு மாசி 27ஆம் திகதி (மார்ச் 11) வியாழக்கிழமை இந்த அற்புத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வீட்டிலேயே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாமா?

மகாசிவராத்திரி விரதமிருந்து இரவில் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாம பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை கண் குளிர தரிசிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் வீட்டிலேயே அபிஷேக ஆராதனை செய்ய விரும்புபவர்கள் பூஜை செய்யலாம்.

வீட்டில் பூஜை செய்ய விரும்புபவர்கள் நான்கு ஜாமத்திற்கான அபிஷேக, அலங்காரம் செய்ய பூஜை பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

வீட்டில் பூஜை செய்பவர்கள், சிவனுக்கு உகந்த மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

எந்த அபிஷேக பொருள் இருந்தாலும், வில்வ இலை அபிஷேகம் கட்டாயம் செய்வது அவசியம்.

முதல் ஜாமம்

இரவு முதல் ஜாமம் பூஜை நேரம்: மாலை 06:27 முதல் 09:29 வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
அபிஷேகம் – பஞ்சகவ்வியம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை மலர்கள் – தாமரை, அலரி
நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைப்பொங்கல்
பழம் – வில்வம்
பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீப ஒளி- புட்பதீபம்
பாராயணம் – ரிக்வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

சிவ புராணம் : மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம்

இரண்டாவது ஜாமம்

இரவு இரண்டாவது ஜாமம் பூஜை நேரம்: 09:29 முதல் 12:31, மார்ச் 12
வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை
அர்ச்சனை மலர்கள் – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் – பலா
பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, குங்குமம்
தீப ஒளி- நட்சத்திரதீபம்
பாராயணம் – யஜூர்வேத பாராயணம் செய்யவும்

மகா சிவராத்திரி 2021 சிவனுக்குரிய காயத்ரி மந்திரம், அஷ்டோத்திர சத நாமாவளி போற்றி மந்திரங்கள்

மூன்றாம் ஜாமம்

இரவு மூன்றாம் ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12, 12:31 AM முதல் 03:32 AM

வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன், பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை மலர்கள் – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் – எள் அன்னம்
பழம் – மாதுளம்
பட்டு – வெண் பட்டு
தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- மேகம், கருங் குங்கிலியம்
தீப ஒளி- ஐதுமுக தீபம்
பாராயணம் – சாமவேத பாராயணம் செய்யவும்

நான்காம் ஜாமம்

இரவு நான்காவது ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12, 03:32 AM முதல் 06:34 AM

வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி
அர்ச்சனை மலர்கள் – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்
பழம் – நானாவித பழங்கள்
பட்டு – நீலப் பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புனுகு சேர்ந்த சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- கர்ப்பூரம், இலவங்கம்
தீப ஒளி- மூன்று முக தீபம்
பாராயணம் – அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.

சிவராத்திரி பரண நேரம்: மார்ச் 12ம் தேதி அதிகாலை 06:34 AM முதல் பிற்பகல் 03:02 PM வரை

விரதமிருப்பவர்கள் இரவில் கண் விழிப்பதற்காகத் தொலைக்காட்சி பார்ப்பது, தொலைப்பேசியில் விளையாடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் சிவ மந்திரங்கள், சிவ திருவிளையாடல்களைப் படிப்பது அவசியம்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment