28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் 50 பேருக்கே அனுமதி!

நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாளை வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொவிட் – 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடாத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவராத்திரி வழிபாடுகளில் கொவிட் – 19 தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவற்றைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபையினர், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாண விவசாயிகள் கௌரவிப்பு

Pagetamil

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Pagetamil

ஐ.ம.ச தேசியப்பட்டியலுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

Pagetamil

ஆசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்!

Pagetamil

குடிநீர் வசதி இல்லாமல் பத்தனை கிரக்கிலி தோட்ட பிரதேச மக்கள்

east pagetamil

Leave a Comment