காரைநகர் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் இது உறுதியானது.
காரைநகர் சாலையில் ஏற்கனவே ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நேற்று அங்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று இரவு வெளியாகின.
இதன்படி, 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 6 பேர் சாரதி, நடத்துனர்கள். இன்று வரை சேவையில் ஈடுபட்டவர்கள்.
தொற்றுடன அடையாளம் காணப்பட்ட சாரதியொருவர், அங்குள்ள தொழிற்சங்க பிரதிநிதி.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக எழுந்தள்ள விவகாரத்தையடுத்து, யாழ்ப்பாண இ.போ.ச பிராந்திய காரியாலயத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இன்று அந்த தொழிற்சங்க பிரதிநிதியும் கலந்து கொண்டார்.
வடக்கிலுள்ள அனைத்து சாலைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.