கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தை பாதுகாத்து எல்லையிடுமாறு பொது மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைமடுவில் அமைந்துள்ள இந்து மயானத்தின் காணி தனிநபரால் அடாத்தாக
பிடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு தென்னை நாட்டப்பட்டுள்ளது என்றும்
மயானத்திற்குரிய காணியினை அடாத்தாக பிடிப்பதனால் மயானத்திற்கு
ஒதுக்கப்பட்டுள்ள காணி பரப்பளவு குறைவதனால் எதிர்காலத்தில் இறுதி
கிரிகைகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் நான்கு கிராம
அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குறித்த இந்து மயானத்தை
பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கும் பொது மக்கள்
கரைச்சி பிரதேச சபை குறித்த இந்து மயானத்தை எல்லையிட்டு பாதுகாக்க முன்வர
வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1