லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 7 வார சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.
வெலிமட பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிசு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது.
நோய் நிலைமை காரணமாக சிசு கடந்த தினம் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிசுவிற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
பின்னர் வெலிமட வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு சிசு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதன்போது சிசுவின் இதயத்தில் நீர் நிறைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்றும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1