எதிர்வரும் செப்ரெம்பர் 2021 க்குப் பிறகு இலங்கையில் எடிசலாட் சிம் அட்டைகள் பயன்பாட்டில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹட்ச் நெட்வொர்க்கில் உள்ள அசல் எடிசலாட் 072 இலக்க வாடிக்கையாளர்களை தங்களது தற்போதைய சிம் அட்டைகளை விரைவில் ஹட்ச் 072 சிம் அட்டைகளுக்கு மேம்படுத்துமாறு ஹட்ச் கோரியுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 2021 க்குப் பிறகு எடிசலாட் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படாது.
அசல் எடிசலாட் வாடிக்கையாளர்களில் 4,000 இற்கும் அதிகமானவர்கள் இதுவரை தங்கள் சிம் கார்டுகளை மேம்படுத்தவில்லை..
வாடிக்கையாளர்கள் புதிய சிம் இட்டைகளை தொலைபேசியிலோ அல்லது ஒன்லைனிலோ லிண்ணப்பித்து, தபால் மூலம் 3-5 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முயற்சியின் மூலம், ஹட்ச் தனது 072 & 078 வாடிக்கையாளர்களை ஒருங்கிணைந்த சேவை முறையின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1