தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ இன்று கோப்பாயிலுள்ள (crafttary) கிறோப்ரறி எனப்படும் மரம் மற்றும் சிரட்டைகளைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்
நீண்டகாலமாக கோப்பாய் பகுதியில் சிரட்டை மற்றும் மரங்களைக் கொண்டு பல்வேறு வகையான கலை அலங்காரப் பொருட்களை வடிவமைத்து வருகின்றன தனியார் ஒருவரின் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது அங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தை வாய்ப்பினை மேற்கொள்வதற்கும் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருவதாகவும் குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு உறுதியளித்தார்.