25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
மலையகம்

தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதியில் 05.03.2021 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து விட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55 – 60 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வெள்ளை சாரமும், மெருன் நிற ஷேட்டும் அணிந்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

Leave a Comment