மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 78 வயதுடைய நபர் ஒருவர் அரலகங்வில பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபரால் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த சந்தேக நபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1