ஒரு பெண்ணை கொலை செய்து, கொழும்பு, டாம் வீதியில் விட்டுச்சென்ற புத்தல பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகரது நடமாட்டம் குறித்த பல சிசிரிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட யுவதியின் தலை இன்னும் கண்டெடுக்கப்படாததால், அதை கண்டறியும் நடவடிக்கையாக பொலிஸ் பரிசோதகரின் நடமாட்டங்களை பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
டாம் வீதியில் பெண்ணின் சடலத்தை கைவிட்ட உப பொலிஸ் பரிசோதகர், மார்ச் 1 ம் திகதி மாலை 4.10 மணியளவில் கொழும்பு தனியார் பேருந்து நிலையத்திலிருந்து மொனராகலா செல்லும் பஸ்ஸில் ஏறினார்.
அன்று இரவு உணவுக்காக பெல்மடுல்ல பகுதியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது.
அவர் இரவு 11.30 மணியளவில் புத்தலவில் பேருந்தில் இருந்து இறங்கியது தெரியவந்துள்ளது.
சில சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை அவர் அணிந்திருந்த பையில் இருந்ததா என கண்டுபிடிக்க போலீஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
களனி ஆற்றில் பெண்ணின் தலை வீசப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில், களனி ஆற்றில் நேற்று மாலை முதல் தேடுதல் நடந்து வருகிறது.