முடவாட்டுக்கால் சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள். முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகீறது. இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது.முடவாட்டுக்கால் சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள்.
முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகீறது. இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது. மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது. இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இந்த முடவாட்டுக்கால் கிழங்குங்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.
ஒரு கிலோ கிழங்கு 300 ருபாய்க்கு கிடைக்கும் இதை ஆறுமாதங்கள் வரை பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முடவாட்டுக்கால் சூப் செய்முறை குறித்து பார்க்கலாம்.
தேவை
முடவாட்டுக்கால் – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
சின்ன வெங்காயம் – பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி – பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப