26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

பத்திரிகை பேரவை சட்டத்தில் திருத்தம்; ஆனால் ஊடக ஒடுக்குமுறையல்ல: கெஹலிய!

பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பத்திரிகை பேரவை சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய அமைச்சர் ரம்புக்வெல், இது ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்காது என்று கூறினார்.

ஒரு பொதுமகனின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவலைகள் இருப்பதாக ஊடக அமைச்சர் கூறினார்.

ஒரு நபர் விரும்பியபடி கட்டுரைகளை எழுதி, அதை தினசரி முக்கிய தலைப்பாகப் பயன்படுத்தி, பின்னர் ஒரு ஒரு சிறிய பகுதி தெளிவுபடுத்தலை வெளியிட்டால், ஒரு நபருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு யார் காரணம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற சுதந்திரத்தில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் ரம்புக்வெல கூறினார்.

ஊடக நெறிமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு சட்ட கட்டமைப்பு தேவை என்று வெகுஜன ஊடக அமைச்சர் கூறினார்.

கோரிக்கைகள் நியாயமான முறையில் செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டால்,
இந்த விஷயத்தில் ஒரு பொறிமுறையானது இருக்க வேண்டும், இருப்பினும் அது அடக்குமுறை அல்ல என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment