சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. இந்த சீரியலில் மகா என்கிற கேரக்டரில் தொடரின் இயக்குநரும், ஹீரோவுமான திருமுருகனைக் காதலிக்கிறவராக நடித்தவர் இவர்.
சொந்த ஊர் காரைக்குடி. அந்த சீரியலுக்குப் பிறகு திருமுருகனின் ‘கல்யாண வீடு’, ராடான் தயாரித்த ‘வாணி ராணி’, ஜீ தமிழ் சேனலில் ‘நிறம் மாறாத பூக்கள்’, விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜுக்கும் நாளை திருமணம் நடக்க இருக்கிறது. கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1