25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

யாழில் அரசியல்மயப்பட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து குழப்பம்: அங்கஜன் தரப்பில் அடாவடி தொடர்கிறது!

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சார்ந்தவர்கள் அரசின் திட்டமொன்றை கட்சி நிகழ்வாக மேற்கொண்டமையினால் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அரசினால் 332 கிரமப்புற மைதானங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமாக செயற்றிட்டத்தை நாடளாவிய ரீதியில் இன்று (02) காலை 10.25 மணிக்கு ஆரம்பிக்குமாறு விளையாட்டு உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சினால் பிரதேச சபைத் தவிசாளருக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

1.5 மில்லியனில் பிரதேச சபை எல்லைகளுக்குள் நாடளாவிய ரீதியில் அபிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இச் செயற்றிட்டத்திற்காக அமைச்சினால் கோரப்பட்டதற்கு அமைய புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தினது மதிப்பீடு வலிகாமமம் கிழக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்டது.

இந் நிலையில் அமைச்சின் அறிவிப்புக்கும்; நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யாழில் வேவ்வேறு நேரங்களில் அடிக்கலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நாட்டி வைப்பார் எனக் குறிப்பிட்டு பிரதேச செயலகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனிடையே பிரதேச சபையின் தவிசாளர், தனக்கு அமைச்சில் இருந்து நாடளாவிய செயற்றிட்டத்தினை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் குறுகிய அழைப்பு என்பதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர், அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பியதுடன் விளையாட்டுக்கழகத்திற்கும் தெரியப்படுத்தி செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்க முயற்சித்தார்.

இதற்காக காலையில் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சென்றபோது, அங்கிருந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் இணைப்பாளர், தன்னையே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பெயர்ப்பலகையினைத் திறந்து வைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் பின்னர் வருகை தந்து அடிக்கல்லை நாட்டுவார் எனவும் தெரிவித்தார்.

இதற்கு தவிசாளர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவேண்டும் என அரசினால் தீர்மானிக்கப்பட்ட விடயம் ஒன்றை வேறு எவரும் கையில் எடுக்க முடியாது. இச் செயற்றிட்டம் அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டில் தெற்கில் ஒரு அபிவிருத்திக்கொள்கையும் வடக்கில் ஒரு கட்சிசார் அபிவிருத்திக்கொள்கையும் இருக்க முடியாது. மக்களின் வரிப்பணம். சபை ஒன்றிற்கான செயற்பாட்டையாரும் செய்யட்டும் என நான் பார்த்திருக்க முடியாது. மக்களுக்கும் உறுப்பினருக்கும் நான் பொறுப்புச்சொல்ல வேண்டும். பிரதேச சபைகளே மேற்படி நிகழ்வினை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் தகுதிவாய்ந்த நிறுவனம். வடக்கில் மட்டும் பிரிதொரு நடைமுறை பின்பற்றப்படமுடியாது என்றார். நீங்கள் சபையின் அனுமதியின்றி காட்சிப் பதாகை நாட்டுவதற்கு முடியாது. நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம். அப்போது இதில் இருக்கின்ற அரச உத்தியோகத்தரும் சாட்சியாக அமைவர் எனத் தெரிவித்து தவிசாளர் தரப்பினர் சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

Leave a Comment