25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
ஆன்மிகம்

நந்த சப்தமி கோபூஜை நன்மை

வியாச மகரிஷி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பசுக்களின் சிறப்புகளைப் போற்றியுள்ளார், அதேபோல் வேதங்களிலும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற ஞான நூல்களிலும் பசுக்கள் குறித்த குறிப்புகளும் வழிபாட்டு நியதிகளும் உள்ளன.

பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள். மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில் மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றைக் கொடுமைப்படுத்தினால் பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளை யாக முஹுர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, கோ தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

கோ பூஜையும் மிக உன்னதமானது. கோயில் களில் கோ பூஜை செய்தால், கோயிலுக்குத் தேவையான பொருள்கள் தானே வரும். கோயில் நன்றாக இருந்தால் அந்த ஊரும் நன்றாக இருக்கும். வீட்டில் கோ பூஜை செய்தால் நமக்குச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; அனைத்துவிதமான தோஷங் களும் தரித்திரமும் நீங்கும்,வியாபாரம் விருத்தி அடையும் என்கின்றன ஞானநூல்கள்.

கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை சப்தமி திருநாளை நந்தசப்தமி எனப் போற்றுவர். இந்த நாளில் கோபூஜை செய்வது மிகவும் விசேஷம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment