25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
விளையாட்டு

இனி ஒழுங்கான பிட்ச் அமைப்போம்: ஐ.சி.சிக்கு உறுதியளித்தது இந்தியா!

நல்ல கிரிக்கெட்டிற்கு பொருத்தமில்லாத பிட்ச்களை அமைத்து, உள்ளூரில் இந்திய அணி வெற்றிபெறுவதாக நீடிக்கும் விமர்சனத்தின் மத்தியில், இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட்டுக்கு தரமான ஆடுகளத்தை அமைப்பாக ஐ.சி.சிக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் தரத்தை ஆய்வு செய்யும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) நடவடிக்கையிலிருந்து பிசிசிஐ தப்பித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் தரமான ஆடுகளத்தை அமைக்கிறோம், பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை அமைக்கிறோம் என பிசிசிஐ உறுதியளித்துள்ளதால், ஐசிசி ஆய்விலிருந்து பிசிசிஐ தப்பித்துள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது சமன் செய்ய வேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.

ஆனால், 4 வது போட்டிக்கு ஆடுகளத்தை தரமானதாக துடுப்பாட்டத்திற்கு சாதகமான அமைத்தால், இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கடும் போட்டியுள்ளதாகவே ஆட்டம் அமையும். இதனால் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்றகணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்கிய 2வது நாளிலேயே ஆட்டம் முடிந்தது. இந்த போட்டி நடந்த ஆடுகளம் மிக மோசமானதாக இருந்தது. இது பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இதுவரை ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து அணி சார்பிலும், நிர்வாகிகள் சார்பிலும் எந்தவிதமான புகாரும் ஐசிசியிடம் அளிக்கவில்லை.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “4வது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளம் ஓரளவுக்கு பவுண்ஸருக்கும், துடுப்பாட்டத்திற்கும் சாதகமானதாக மாற்றப்பட்டு இரு அணிகளும் நல்ல ஸ்கோர் செய்யும் விதத்தில் இருக்கும்.

ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடத்தப்படும்போது, ஒருபோட்டியின் முடிவை மட்டும் ஒதுக்கி வைத்துவிட முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியும் முடிந்தபின், ஐசிசி நடுவர் ஸ்ரீநாத் அறிக்கைக்குப் பின்புதான் ஐசிசி நடவடிக்கை இருக்கும். இப்போதுவரை இங்கிலாந்து அணி சார்பில் ஐசிசியிடம் ஆடுகளம் குறித்து எந்தப்புகாரும் அளிக்கவில்லை” எனத் தெரிவி்த்தார்.

4 வது டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கும், துடுப்பாட்டத்திற்கும் சாதகமாக அமைக்கப்பட்டால் ஆட்டம் யார் பக்கம் இருக்கும் என்பது இப்போதே யூகிக்க முடிகிறது. ஏனென்றால், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தனிப்பட்ட காரணங்களால் 4வது டெஸ்ட் போட்டிக்கு விடுவிக்கப்பட்டார். பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்படவே அதிகமான வாய்ப்புள்ளது.

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்டர்ஸன், பிராட் இருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும்பலமாக அமையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment