இலங்கையில் நேற்று 460 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 425 நபர்கள் பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 35 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்றிலிருந்து குணமடைந்த 748 நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,373 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4,053 நபர்கள் COVID-19 க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 379 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1