24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இந்தியா

அதிமுக – பாமக கூட்டணி உறுதியானது

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக நிற்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார். அதேபோன்று திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சியும் வெளியேறியுள்ளது.

அதிமுக கூட்டணிக்குள் வர வன்னியருக்கு 20% உள் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என ராமதாஸ் கூறினார். நேற்று 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவைக் கூட்டணியில் தக்கவைத்தது அதிமுக தலைமை.

10.5% உள் ஒதுக்கீடு காரணமாக சந்தோஷத்தில் இருந்த பாமக தலைவர்கள் இன்று மதியம் நடத்திய பேச்சுவார்த்தையில் 23 தொகுதிகள் பேசி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அதிமுக தலைமை. இதை அன்புமணி ராமதாஸும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியானதை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

ஒப்பந்தம் பற்றி அறிவித்த ஓபிஎஸ் கூறியதாவது:

“அதிமுக-பாமக கூட்டணி அமைத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதிமுக-பாமக இடையே ஏற்பட்ட ஒப்பந்த அடைப்படையில் அதிமுக கூட்டணியில் அமைந்துள்ள கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், தொகுதி எண்ணிக்கை மட்டுமே தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது, அதன் பின்னர் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் உட்கார்ந்து எந்த மாவட்டத்தில் எந்த தொகுதி என பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

“வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாமக அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதால் நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றிப்பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலைப்பொறுத்தவரை எங்களின் நோக்கம், கோரிக்கை வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசு அதை நிறைவேற்றி இருக்கிறது. எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனாலும் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து பெற்றுள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம் வன்னியர்களுக்கு 10.5% குறைத்து அளித்ததால் நாங்கள் சட்டப்பேரவை தொகுதி எண்ணிக்கையை குறைத்துள்ளோம். 40 ஆண்டுகால போராட்டம் எங்களுக்கு நல்ல முடிவு வந்துள்ளது அதனால் எங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment